உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டி

கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு இடையிலான மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பை -2024 விளையாட்டுப் போட்டிகள் செப்.10 முதல் 24 வரை நடக்கிறது. இதன்படி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானம், தனியார் கல்லுாரி, பள்ளியில் கல்லுாரி மாணவர்களுக்கான கால்பந்து, கூடைப்பந்து, கையுந்து பந்து, நீச்சல் போட்டி, கபடி, இறகுப்பந்து, சிலம்பம் ஆகிய போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். இவர்களில் முதலிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இன்று அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி