உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட   அளவிலான வினாடி -வினா போட்டி

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட   அளவிலான வினாடி -வினா போட்டி

ராமநாதபுரம்: தமிழ்நாடு அஞ்சல் துறையின் தபால் தலை சேகரிப்பு கண்காட்சி விழாவில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான வினாடி -வினா போட்டி நடந்தது.ராமநாதபுரம் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தலைமை வகித்தார். தபால் துறை, ஸ்டாம்ப் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டி நடந்தது.இதில் ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம், ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2ம் இடம், அமிர்தா வித்யாலயம் (சி.பி.எஸ்.இ.,) 3ம் இடத்தை பெற்றனர்.முதலிடம் பிடித்த பள்ளி மாணவர்கள் மதுரை மண்டல அளவில் நடைபெறும் வினாடி வினா போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தபால்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி