மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம்
10-Oct-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் செய்யது அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் இ.எம்.அப்துல்லா நினைவாக மாநில, மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடந்தது. மாநில அளவில் ஆண்கள் அணியும், மாவட்ட அளவிலான போட்டியில் பெண்கள் அணியினர் பங்கேற்றனர். கல்லுாரித்தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் பங்கேற்று கல்வி, விளையாட்டுகளில் பங்கேற்று மாணவர்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என பேசினார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்செல்லத்துரை அப்துல்லா, டாக்டர் அட்டிப் அப்துல்லா, ராமநாதபுரம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி பங்கேற்றனர். மாநில போட்டியில் ஆண்கள் பிரிவில் கோவை ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி முதலிடம் பெற்று ரூ.10 ஆயிரம் பரிசையும், காரைக்குடி ராஜராஜன் கல்லுாரி 2ம் இடம் பெற்று ரூ. 7000, கோவை சக்தி பொறியியல் கல்லுாரி 3ம் இடம் பெற்று ரூ.5000 பெற்றன. மாவட்ட போட்டியில் பெண்களுக்கான பிரிவில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை-அறிவியல்கல்லுாரி முதலிடம் பெற்று ரூ.5000, வேலு மனோகரன் கலை-அறிவியல் கல்லுாரி 2ம் இடம் ரூ.3000, முகமது சதக் ஹமீது கலை-அறிவியல் கல்லுாரி 3ம் இடம் ரூ. 2000 வென்றனர்.ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் சத்தியேந்திரன், பணியாளர்கள் செய்தனர்.
10-Oct-2024