மேலும் செய்திகள்
கமுதியில் பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை ஊர்வலம்
5 hour(s) ago
கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
5 hour(s) ago
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
5 hour(s) ago
பரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் நுழைவுப் பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் விபத்து அச்சத்துடன் டிரைவர்கள் பயணிக்கும் நிலை உள்ளது.மதுரை, ராமேஸ்வரம் வழித்தடத்தில் பரமக்குடி பிரதான பஸ் ஸ்டாண்ட்டாக உள்ளது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. பல ஆயிரம் பயணிகள் இந்த பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதங்களில் பெய்த கன மழையால் பஸ்ஸ்டாண்ட் நுழைவுப்பகுதியில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சீரமைப்பதில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். இதனால் பள்ளங்கள் ஒவ்வொரு முறையும் டிரைவர்கள் பஸ் ஸ்டாண்ட் நுழையும் இடத்தில் வளைவான பகுதியாக உள்ளதால் விபத்து அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். மேலும் டூவீலர் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்ட் உள் பகுதியில் உள்ளதால் டூவீலர் ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். ஆகவே விபத்துக்கள் ஏற்படும் முன் பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago