உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீபாவளி கொண்டாட்டம் மழையால் இழந்த உற்சாகம்

தீபாவளி கொண்டாட்டம் மழையால் இழந்த உற்சாகம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக பட்டாசு, துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் பலகாரம் செய்து, புத்தாடை அணிந்து தீபாவளி கொண்டாடினர். புதுமணத் தம்பதிகள் தலை தீபாவளியை வீடுகளில் கொண்டாடினர். ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், கோதண்டராமர் கோயில், வினை தீர்க்கும் வேலவர் கோயில் உள்ளிட்ட பல்வேறுகோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் புத்தாடை அணிந்துவந்து வழிபட்டனர். தீபாவளியன்று காலை முதல் மழை பெய்து வந்ததால் ரோட்டில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதனால் பட்டாசு வெடிக்க முடியாமல் சிரமப்பட்டனர். அதிகாலைவிடாமல் பெய்த துாரல் மழையால்தீபாவளி கொண்டாட்டம் உற்சாகம் இழந்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி