மேலும் செய்திகள்
டூவீலர் மோதிய விபத்தில் நடந்து சென்ற முதியவர் பலி
16 hour(s) ago
தவறி விழுந்த பெண் பலி
23-Oct-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்துார் பகுதி வர்த்தக நிறுவனங்களில் போலீசாருக்கு என தீபாவளி வசூல் செய்த தி.மு.க., நிர்வாகி அஜ்மல்கான், அவரது நண்பர் செல்வத்தை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்ற போது போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓடினர். செல்வம் கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் விடிவெள்ளி நகரை சேர்ந்த சகுபர் சாதிக் மகன் அஜ்மல்கான் 38. இவர் ஆர்.எஸ். மங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரும் நண்பர் பரஞ்சோதிவாசல் தேவராஜ் மகன் செல்வம் 35, ஆகியோரும் அக்.20ல் அப்பகுதியில் உள்ள பட்டாசு கடைகள், பேக்கரிகள், வர்த்தக நிறுவனங்களில் போலீசார், தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் தன் மூலம் தீபாவளி வசூல் செய்யக் கூறியதாக தெரிவித்து வசூல் செய்துள்ளனர். வியாபாரிகள் போலீசாருக்கு தெரிவித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஏட்டுகள் கோவிந்தசாமி, முருகானந்தம் ஆகியோர் புகார் குறித்து விசாரிக்க சென்றனர். பின் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும் போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓடி தலைமறைவாகினர். தன்னை ஆபாசமாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக இதுகுறித்து ஏட்டு கோவிந்தசாமி அக்.22ல் அளித்த புகாரில் போலீசார் செல்வத்தை கைது செய்தனர். அஜ்மல்கானை தேடி வருகின்றனர். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
16 hour(s) ago
23-Oct-2025