மேலும் செய்திகள்
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
11-Apr-2025
சாயல்குடி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சாயல்குடியில் மாணவரை விரட்டி கடித்த நாயை பேரூராட்சி பணியாளர்கள் பிடித்தனர்.நேற்று முன்தினம் சாயல்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சதாம் உசேன் மகன் முகமது சலீம் 10, என்ற ஐந்தாம் வகுப்பு மாணவரை தெரு நாய் ஒன்று விரட்டி கடித்ததில் வலது கையில் ரத்த காயம் ஏற்பட்டு சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவர் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் விரட்டி கடித்த வெறி நாயை பாதுகாப்பாக பிடித்தனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், தெருக்களில் பொதுமக்களுக்கு இடையூறாக திரியும் நாய்களை பிடிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.பொதுமக்கள் கூறுகையில், சாயல்குடி நகர் பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் கூட்டமாகத் திரிந்து இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து கு.க., செய்ய கால்நடைத்துறையினர் பேரூராட்சி நிர்வாகத்துடன் திட்டத்தை வகுக்க வேண்டும் என்றனர்.
11-Apr-2025