மண்டாடி படம் ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்க வேண்டாம்: எஸ்.பி.,யிடம் புகார்
தொண்டி: மண்டாடி படம் ஷூட்டிங் எடுக்க அனுமதி வழங்க கூடாது என எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொண்டியில் நடிகர் சூரி நடிக்கும் மண்டாடி படம் சூட்டிங் நடைபெற வுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொண்டி கடற்கரை பகுதியில் துவங்கியுள்ளது. இந்நிலையில் இப்படம் சூட்டிங் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.,சந்தீஷிடம் தொண்டியை சேர்ந்த தி.மு.க., மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சீனிராஜன் புகார் அளித்துள்ளார். அதில் தொண்டியில் நடிகர் சூரி நடிக்கும் மண்டாடி படம் எடுக்க படக்குழுவினர் பார்வையிட்டுள்ள னர். தொண்டியில் உள்ள ஜெட்டி பாலத்தில் மக்கள் நடந்து செல்ல கூடாது என தடை செய்யப்பட்ட பகுதியாக உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த படத்தின் கதை மீனவர்களின் கதையாகும். இப்பகுதியில் பலதரப்பு மீனவர்கள் வசிக்கின்றனர். மீனவர்களிடையே பிரச்னை இருப்பது போல் படம் தயாரிக்கபடுவதாக தெரிகிறது. எனவே படம் எடுக்க அனுமதி வழங்க கூடாது என்று கூறியுள்ளார்.