உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்பாலைக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு

திருப்பாலைக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு

ஆர்.எஸ்.மங்கலம்: கிழக்கு கடற்கரை சாலை, திருப்பாலைக்குடி பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடற்கரை கிராமப் பகுதியான இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உப்புத் தன்மை வாய்ந்ததாக உள்ளதால் மழைக் காலங்களில் அப்பகுதியில் உள்ள குடிநீர் ஊரணிகளில் தேங்கும் தண்ணீரையும், காவிரி கூட்டுக் குடிநீரையும் முழுமையாக நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில், தற்போது திருப்பாலைக்குடி பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் முழுமையாக சப்ளை செய்யப்படாத நிலையில் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.மேலும், அப்பகுதியில் டிராக்டர்களில் விற்பனை செய்யப்படும் பாதுகாப்பற்ற குடிநீரை குடம் ரூ.15 வரை கொடுத்து பயன்படுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அப்பகுதிக்கு முழுமையாக காவிரி கூட்டு குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை