உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் காரில் இறந்து கிடந்த டிரைவர்

பரமக்குடியில் காரில் இறந்து கிடந்த டிரைவர்

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோட்டில் காரில் துாங்கியபடி இறந்த டிரைவர் உடல் மீட்கப்பட்டது. பரமக்குடி பாண்டியன் தெருவை சேர்ந்தவர் பலராமன் 51. இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ராமநாதபுரத்தில் உள்ளார். இந்நிலையில் பலராமன் வாடகை கார் டிரைவராக பணிபுரிகிறார். மேலும் சிறுநீரகத்தில் பிரச்னையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து இரவு வைகை ஆற்றில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர், ஆற்றில் தண்ணீர் வரும் என்பதால் காரிலேயே இரவில் தூங்கியுள்ளார். இச்சூழலில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பலராமன் இறந்த கிடப்பது குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். பரமக்குடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ