உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அதிகாரிகளை கொல்ல முயன்ற வழக்கு டிரைவர், வாகன உரிமையாளர் கைது

அதிகாரிகளை கொல்ல முயன்ற வழக்கு டிரைவர், வாகன உரிமையாளர் கைது

ராமநாதபுரம்,ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்திய சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்ற அதிகாரிகள் மீது வாகனத்தை ஏற்ற முயன்ற வழக்கில் டிரைவர், வாகன உரிமையாளர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் பறக்கும் படை தாசில்தார் தமீம்ராஜா, வருவாய் ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் ராமநாதபுரம் செட்டிய தெரு சந்திப்பில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து மினி சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றனர். அப்போது அதிகாரிகள் மீது சரக்கு வாகனத்தை ஏற்ற முயன்றனர். இதில் வருவாய் ஆய்வாளர் முத்துராமலிங்கம் தடுமாறி விழுந்ததில் காயமடைந்தார். ரேஷன் அரிசி கடத்தியவர்கள் வாகனத்தை சின்னக்கடை தெருவில் விட்டுவிட்டு தப்பியோடினர். கடத்தப்பட்ட 2.91 டன் ரேஷன் அரிசி, மினி சரக்கு வாகனம், சிறுவன் கைது செய்யப்பட்டு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தமீம்ராஜா புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதிகாரிகளை கொல்ல முயன்றதாக மினி சரக்கு வாகன உரிமையாளர் சிக்கல் காமராஜபுரம் சிதம்பரம் மகன் வீரமணி 34, டிரைவர் கடலாடி, காவாகுளம் முனியராஜ் மகன் பிரகாஷ் 23, ஆகியோரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை