மார்ச் 17-22 வரை சொட்டு மருந்து முகாம்
கீழக்கரை; வைட்டமின் 'ஏ' சக்தியை அதிகரிக்க வேண்டி பிறந்து 6 மாதம் முதல் 11 மாத குழந்தைகளுக்கு ஒரு சொட்டும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரண்டு சொட்டும் மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் 'ஏ' சொட்டு மருந்து வழங்கும் முகாம் வருகிற நாளை (மார்ச் 17) முதல் 22 வரை கீழக்கரை அங்கன்வாடி மையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட உள்ளது. மருந்து உட்கொள்வதால் எவ்வித பக்க விளைவுகளும் வருவதில்லை என்றும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை முகாமில் பங்கு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.5 வயது வரை உள்ள குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கீழக்கரை சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.