போதை விழிப்புணர்வு ஊர்வலம்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பகவதிகுமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மெசியானந்தி முன்னிலை வகித்தார்.முன்னதாக மாணவர்கள் போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து போதை பொருள்கள் பயன்படுத்துவதற்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், துண்டு பிரசுரங்கள் கொடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.