மேலும் செய்திகள்
சுதந்திர தினவிழா முன்னேற்பாடு ஆலோசனை
02-Aug-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்கள் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்தனர். சென்னையில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நந்தனம் அரசு கலைக்கல்லுாரியில் காணொளி வாயிலாக 'போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு' குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு உறுதி மொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் நேரடி ஒளிபரப்பின் போது ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். மாவட்ட கூடுதல் எஸ்.பி., பாலச்சந்திரன், உதவி ஆணையர் (கலால்) கங்காதேவி, ராமநாதபுரம் ஆர்.டி.ஒ., ராஜமனோகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், கல்லுாரி முதல்வர் பெரியசாமி, நகராட்சி தலைவர் கார்மேகம், டி.எஸ்.பி., ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
02-Aug-2025