உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கடலாடி: கடலாடி அரசு கலை கல்லுாரி சார்பில் சாயல்குடி நகர் பகுதிகளில் என்.எஸ்.எஸ்., சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரசு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) விமலா தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத் தலைவர் அன்னதாசன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை சாயல்குடி இன்ஸ்பெக்டர் உக்கிர பாண்டியன் துவக்கி வைத்தார். சாயல்குடி பஸ் ஸ்டாண்ட் முதல் முக்கிய வீதிகளின் வழியாக போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகை ஏந்தியவாறு மாணவர்கள் வந்தனர். விரிவுரையாளர்கள் நீரா பொன்முத்து, கலாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கலையரசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ