உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முருங்கை சீசன் துவங்கியது

முருங்கை சீசன் துவங்கியது

திருவாடானை: முருங்கைக்காய் சீசன் துவங்கியதால் சைவப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விலை குறைந்ததால் விற்பனையும் அமோகமாக உள்ளது.திருவாடானை, தொண்டி பகுதியில் கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் முருங்கை மரங்கள் வளர்க்கின்றனர். முருங்கைக்காய் மற்றும் கீரை மருத்துவ குணம் கொண்டதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பருவ மழையால் பூக்கள் உதிர்ந்து முருங்கை வரத்து நின்று விட்டது. தற்போது கிராமங்களிலிருந்து முருங்கைகாய் வரத்து அதிகமாக உள்ளதால் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். பெண்கள் கூறியதாவது: முருங்கைக்காய் சாம்பார் தான் மிகவும் ருசியாக இருக்கும். கடந்த மாதம் கிலோ ரூ.100 முதல் 150 வரை விற்பனையானது. கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யபடுகிறது. விலை குறைந்து விட்டதால் ஆர்வமாக வாங்கிச் செல்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ