உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கிழக்கு தெரு சாலை

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கிழக்கு தெரு சாலை

கீழக்கரை: கீழக்கரை கிழக்குத் தெரு பகுதியில் நாள்தோறும் தொடர் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.கீழக்கரை கிழக்கு தெருவில் ஐந்திற்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. சாலையின் இரு புறங்களிலும் அதிகளவு ஆட்டோக்கள் ஒழுங்கற்ற முறையில் நிறுத்தி வைக்கப்படுவதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட போக முடியாத சூழல் நிலவுகிறது.காலை, மாலை நேரங்களில் பிரதான இச்சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு வாகனங்களால் பள்ளி, கல்லுாரிக்கு செல்லக்கூடிய வேன்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதில் பெரும் இடையூறு உள்ளது.கீழக்கரை போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் வருவாய்த்துறையினர் ஒன்றிணைந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி