உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை

ராமநாதபுரம்: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் நகர் சாலைத்தெருவில் உள்ள ஜெபமாலை சர்ச்சில் மெழுவர்த்தி ஏந்தி சிறப்பு ஆராதனை நடந்தது.இயேசு சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தந்தையாகிய இறைவனுடன் இணைந்தார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் ஜெபமாலை சர்ச்சில் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆராதனை வழிபாடுகள் நடந்தது.பாதிரியார்கள் மரிய டெல்லஸ், சிங்காரயர்,சவரிமுத்து, கிரிதரன் உட்பட பலர் பங்கேற்றனர். இதுபோல் பாம்பன், மண்டபம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ சர்ச்களில் ஈஸ்டரை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !