பாஸ்கு திருவிழா
தொண்டி: தொண்டி அருகே காரங்காடு துாய செங்கோல் மாதா சர்ச்சில் 130 ம் ஆண்டு பாஸ்கு திருவிழா நடந்தது. பாடுகளின் பாஸ்கும், உயிர்ப்பின் பாஸ்கும் நடந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். காரங்காடு மக்களால் இயேசுவின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து குணமளிக்கும் நற்கருணை ஆராதனை, சிறப்பு நவநாள் திருப்பலி நடந்தது.