மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: மதுரை
31-Aug-2025
ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவு கிரகண அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 9:57 மணி முதல் நேற்று அதிகாலை 1:26 மணி வரை சந்திர கிரகணம் நடந்தது. இதனால் இரவு 8:00 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை ராமேஸ்வரம் கோயில் நடை அடைக்கப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு மேல் கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சந்திரசேகர் சுவாமி, கவுரி அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின் அஸ்திரதேவருடன் கோயில் குருக்கள் அக்னி தீர்த்தத்தில் நீராடினர். பின் அங்கிருந்து புறப்பாடாகி கோயிலுக்கு வந்ததும் சுவாமி, அம்மனுக்கு கிரகண அபிஷேக பூஜை நடந்தது. இதன் பின் நேற்று அதிகாலை 3:40 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அர்த்தசாம பூஜை நடந்தது. இதையடுத்து நேற்று காலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை ஸ்படிகலிங்கம் பூஜை, காலபூஜைகள் வழக்கம் போல் நடந்தது.
31-Aug-2025