மூதாட்டி, முதியவர் தற்கொலை
தொண்டி: தொண்டி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டியும், மற்றொரு சம்பவத்தில் பூச்சி மருந்து குடித்து முதியவரும் தற்கொலை செய்தனர்.தொண்டி பாண்டுகுடி இந்திரா 67. கணவர் இறந்து விட்டார். இரு மகன்கள் உள்ளனர். காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து இந்திரா தற்கொலை செய்தார். திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான வீரர்கள் உடலை மீட்டனர். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.* தொண்டி குளத்துார் தோட்டத்தில் 50 வயதுள்ள ஒருவர் இறந்து கிடந்தார். தொண்டி போலீசார் கூறுகையில், அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த கோபால் 50. குடும்பத்தைவிட்டு பிரிந்து இப்பகுதியில் தங்கி கூலி வேலை செய்தார். கோபால் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்தனர்.