மேலும் செய்திகள்
திருத்தணி நகைக்கடையில் 3 சவரன் திருடிய பெண்
02-Aug-2025
சாயல்குடி: சாயல்குடி அருகே வீடு புகுந்து பீரோவை உடைத்து நகை திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார். சாயல்குடி அருகே ஒப்பிலான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்ஜான் பீவி, இவரது வீட்டிற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர் பீரோவை உடைத்து அதிலிருந்து ஒரு பவுன் தங்க கம்மலை எடுத்துக்கொண்டு ஓடினார். அப்போது ரம்ஜான் பீவி கூச்சலிட்டார். இதையடுத்து கிராம இளைஞர்கள் தேடுதலில் ஈடுபட்டனர். ஒரு முதியவர் கையில் சுத்தியல், ஸ்குரு டிரைவர் ஆகியவற்றை பையில் வைத்தபடி ஓடியுள்ளார். அவரை பிடித்து விசாரித்ததில் ரம்ஜான் பீவி வீட்டில் தங்க கம்மலை திருடியது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் கமுதி அருகே நெறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேவுகராஜ் 66, என்பது தெரிய வந்தது. இதையடுத்து சேவுகராஜை கைது செய்த போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
02-Aug-2025