உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்திற்கு விரைவில் மின் இன்ஜின் ரயில் இயக்கம்

ராமேஸ்வரத்திற்கு விரைவில் மின் இன்ஜின் ரயில் இயக்கம்

ராமநாதபுரம்,:ராமநாதபுரம் -- ராமேஸ்வரம் இடையே ரயில் பாதை மின்மயமாக்கும் பணி நிறைவடைந்த நிலையில் தெற்கு ரயில்வே முதன்மை மின்சார பொறியாளர் கணேஷ் ஆய்வு செய்தார். முன்னதாக ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஆய்வு ரயிலுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. தெற்கு ரயில்வே கூடுதல் மண்டல மேலாளர் தாமோதரன் கூறியதாவது: ராமநாதபுரம் --ராமேஸ்வரம் இடையே மின்மயமாக்கும் பணி முழுவதும் நிறைவடைந்தது. இந்நிலையில் மின்மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் மின்சார பொறியியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது. ஆய்வின் போது பாதையில் உள்ள பாலங்கள், ரயில்வே கேட்டுகள், சாலை மேம்பாலங்களில் ரயிலின் இயக்கம் சீராக உள்ளதா, புதிதாக அமைக்கப்பட்ட மின்சார வடத்தில் மின் விநியோகம் சீராக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வுக்கு பின் ராமநாதபுரம்--ராமேஸ்வரம் இடையே ரயில் இயக்குவது குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்படும். அடுத்த ஒரு வாரத்தில் ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் ராமநாதபுரம்--ராமேஸ்வரம் இடையே மின்சார இன்ஜின்கள் கொண்டு ரயில்கள் இயக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி