உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லாரி மோதி மின்கம்பம் சேதம்

லாரி மோதி மின்கம்பம் சேதம்

முதுகுளத்துார் : -முதுகுளத்துார் பொசுக்குடிப்பட்டி அருகே ரோட்டோர மின்கம்பத்தில் மணல் லாரி மோதியதில் மின்கம்பம் சேதமடைந்தது.சத்திரக்குடியில் லாரியில் மணல் திருடிச் செல்வதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சத்திரக்குடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சத்திரக்குடி அருகே மணல் திருடி சென்ற லாரியை போலீசார் பின் தொடர்ந்து வந்தனர்.அப்போது முதுகுளத்துார் -பரமக்குடி ரோடு பொசுகுடிப்பட்டி அருகே ரோட்டோர மின்கம்பத்தில் லாரி மோதி விபத்திற்குள்ளானது. டிரைவர் தப்பி ஓடினர். மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. கீழத்துாவல் இன்ஸ்பெக்டர் இளங்கோ லாரியை பறிமுதல் செய்தார். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி