உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நடுரோட்டில் மின் கம்பம் 

நடுரோட்டில் மின் கம்பம் 

திருவாடானை: தொண்டி அருகே மாவிலங்கை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் நடுரோட்டில் மின்கம்பம் உள்ளது. இதனால் சரக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இரவில் டூவீலர்களில் செல்பவர்கள் மின்கம்பத்தில் மோதி காயமடைகின்றனர். போக்குவரத்திற்கு ஆபத்தாகவும், இடையூறாகவும் இருக்கும் இந்த மின்கம்பத்தை அகற்றி தெருவின் ஓரத்தில் அமைக்க மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ