உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் மோதி எலக்ட்ரீசியன் பலி

டூவீலர் மோதி எலக்ட்ரீசியன் பலி

தொண்டி: தொண்டி அருகே வேலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அருளானந்து 52. தொண்டி மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக எலக்ட்ரீசியனாக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் வீட்டை நோக்கி நடந்து சென்றார். அப்போது டூவீலர் மோதியதில் அருளானந்து அதே இடத்தில் பலியானார். டூவீலர் ஓட்டிச் சென்ற மகாசக்திபுரம் மணிபாலா 19, பின்னால் அமர்ந்திருந்த அருண்பாண்டி 21, இருவரும் கீழே விழுந்ததில் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை