உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: தமிழ்நாடு மின்சார வாரிய எம்பிளாயீஸ் பெடரேஷன் யூனியன் சார்பில் ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு திட்ட தலைவர் காதர்பாட்சா தலைமையில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மண்டல திட்ட செயலாளர் வீரசேகரன் கூறியதாவது: மின்சார வாரிய பணியாளர்களுக்கு 2024 முதல் ஊதிய உயர்வு வழங்கவில்லை. முன்னதாக மற்ற பணியாளர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்ட போது கேங்மேன் பணியாளர்களுக்கு வழங்காமல் விடப்பட்ட ஊதிய உயர்வு தற்போது வரை நிலுவையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக விருப்ப பணியிடமாற்றம் செய்யப்படவில்லை. மின்சார வாரியத்தில் 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. பணியாளர் பற்றாக்குறையால் மின்சார விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை