உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே காடு காவல்காரன் வலசையில் உள்ள கப்பல் ஆத்துக்கரை தர்ம முனிஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.யாகசாலை பூஜை நிறைவிற்குப் பிறகு கடம் புறப்பட்டு கோயில் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். கப்பல் ஆத்துக்கரை தர்மமுனீஸ்வரர், மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ