மேலும் செய்திகள்
மிளகாய் விதை விதைப்பு; விவசாயிகள் ஆர்வம்
02-Oct-2024
ஆர்.எஸ்.மங்கலத்தில் துாறல் மழை
28-Sep-2024
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் உள்ள 20 பாசன மடைகள் வழியாக 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கண்மாய் சில ஆண்டுகளுக்கு முன்பு துார்வாரப்பட்டு, சேதமடைந்த மடைகள், கரைகள் பலப்படுத்தப்பட்டன. மேலும் விவசாயிகள் பாசன மடைகளுக்கு எளிதாக சென்று வரும் வகையில் கண்மாய் கரை வழியாக கிராவல் ரோடு அமைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பாசன மடைகளுக்கு எளிதாக சென்று வந்தனர். தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ரோடு குண்டும் குழியுமாக உள்ளதுடன் கரையின் இரு புறமும் சீமைக்கருவேலம் அடர்ந்து விவசாயிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடையும் முன் அதிகாரிகள் ரோட்டை சீரமைப்பதுடன் இருபுறமும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தினர்.
02-Oct-2024
28-Sep-2024