உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செய்யது அம்மாள் கலை அறிவியல்  கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் 

செய்யது அம்மாள் கலை அறிவியல்  கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.முகாமினை கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார். 10க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று காலிப்பணியிடங்களை அறிவித்தும், நிறுவனத்தின் செயலாக்கங்களையும் விளக்கினர். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனையின் டாக்டர் சானாஸ்பரூக் அப்துல்லா ஆலோசனைகள் வழங்கினார். கல்லுாரி தாளாளர் செல்லதுரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி ஆகியோர் பங்கேற்ற அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு நன்றியினை தெரிவித்தனர். தகவல் தொடர்பியல் துறையின் உதவிப் பேராசிரியர் பிரதீப்ராஜேஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை