மேலும் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாம்
21-Nov-2024
ராமநாதபுரம்,: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுநாள் (டிச.13) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையானவர்களை தேர்வு செய்யலாம். பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம். தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார், ரேஷன் கார்டு, போட்டோக்களுடன் டிச.,13 காலை 10:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பங்கேற்கலாம். முகாமில் வேலை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து ஆகாது. தனியார் துறை நிறுவனங்கள், வேலை தேடுவோர் கட்டணம் ஏதுமின்றி www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் தெரிவித்துள்ளார்.
21-Nov-2024