உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தென்னிந்திய அளவிலான தடகளப்போட்டிபொறியியல் கல்லுாரி மாணவிகள் சாதனை

தென்னிந்திய அளவிலான தடகளப்போட்டிபொறியியல் கல்லுாரி மாணவிகள் சாதனை

ராமநாதபுரம்: ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்த தென்னிந்திய அளவிலான தடகளப்போட்டியில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி மாணவிகள் தங்கம், வெண்கலப்பதக்கங்கள் வென்றனர். குண்டூரில் உள்ள ஆச்சாரியா நாகர்ஜூனா பல்கலை வளாகத்தில் தென்னிந்திய அளவிலான ஜூனியர் தடகளப்போட்டிகள் நடந்தது. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி மாணவி வி.மதுமிதா குண்டு எறிதலில் தங்கப்பதக்கம், சங்கிலி குண்டு எறிதலில் வி.ரித்திகா வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டியில் வி.மதுமிதா குண்டு எறிதலில் முதலிடமும், வட்டு எறிதலில் இரண்டாமிடம் பிடித்து சாதித்துள்ளார். அவர் அடுத்த மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மாணவிகளை கல்லுாரித்தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, முதல்வர் பெரியசாமி, உடற்கல்வி இயக்குநர் சந்தியேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !