மேலும் செய்திகள்
சிட்டியில் சினிமா
19-Jul-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் 'டிரீம்டா இங்கிலீஷ்' என்ற பெயரில் ஆங்கில மொழி பயிற்சி ஆய்வகம் திறப்பு விழா நடந்தது. கல்லுாரித் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். சென்னை கிஷ்புலோ டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் சம்பந்தம் ஆங்கில மொழி ஆய்வகத்தை திறந்து வைத்தார். அவரது நிறுவனத்தின் 'டிரீம் டா' செயலியை அறிமுகம் செய்து வைத்தார். ஆக்கம் 360 நிறுவன சி.இ.ஓ., திருமூர்த்தி, ஐசோர்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ., சிவக்குமார், டிரீம்டா இங்கிலீஷ் நிறுவனத்தின் சி.இ.ஓ., காவ்யா காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரேஷ் சம்பந்தம் கூறியதாவது: கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் மாணவர்கள் தங்களின் வளர்ச்சியை அதிகரித்துக் கொள்வதற்கு ஆங்கில மொழி முக்கியமானதாக உள்ளது. மாணவர்கள் எளிதாக படிக்கும் போதே ஆங்கிலம் கற்று, சரளமாக பேச வேண்டும் என்பதற்காக 'ட்ரீம்டா ' செயலியை உருவாக்கியுள்ளோம். வெளி மாநிலத்தில் தங்கி அங்குள்ளவர்களுடன் பழகினால் எளிதாக அம்மாநில மொழியை கற்றுக்கொள்கின்றனர். அதே போன்று கல்லுாரியில் படிக்கும்போதே ஆங்கில பயிற்சியால் மாணவர்களின் கவனம் சிதறாது.ஆங்கிலம் எளிதாக கற்று பேசி பழகுவதற்கான அனைத்து தொழில்நுட்பங்களும் டிரீம்டா செயலியில் உள்ளது. எவ்வித தயக்கமின்றி, தன்னம்பிக்கையுடன் ஆங்கிலம் எழுத, பேச மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். ஏற்கனவே சேலம், தேனி, திருச்செங்கோடு கல்லுாரியில் செயல்படுத்தியுள்ளோம் என்றார்.கல்லுாரி கணினித்துறை தலைவர் கார்த்திகேயன் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆங்கிலத்துறை பேராசிரியை கவிதா நன்றி கூறினார்.
19-Jul-2025