உள்ளூர் செய்திகள்

சமத்துவ வளைகாப்பு 

ராமநாதபுரம்: ராம்நாடு இன்னர்வீல் சங்கம் மற்றும் ராம்நாடு ரோட்டரி சங்கம் சார்பில் ஆடிப்பூரம் சமத்துவ வளையல் திருவிழா நடந்தது. ரோட்டரி கவர்னர் காந்தி தலைமை வகித்தார். இன்னர்வில் மாவட்டம் தலைவர் கீதா முன்னிலை வகித்தார். அனைத்து மதத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடந்தது. அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தாம்பூலப் பை, வளைகாப்பு கலவை சாதம் விருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இன்னர் வீல் சங்க முன்னாள் தலைவர்கள் கவிதா, ரம்யா, செல்வி, கிருத்திகா, ரோட்டரி சங்க தலைவர் ராம்குமார், செயலர் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டாக்டர் அரவிந்த்ராஜ் மற்றும் கனகப்பிரியா ஏற்பாடுகளை செய்தனர். ––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி