மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
21-Dec-2024
கடலாடி; கடலாடி அரசு கலைக் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள் இணைந்து பொங்கல் வைத்தனர். கரும்பு மற்றும் பனங்கிழங்குகளால் அலங்காரம் செய்திருந்தனர். சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு பலுான் உடைத்தல், உறியடித்தல், எலுமிச்சம் பழ கரண்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தன்னார்வமிக்க கல்லுாரி மாணவர்கள் செய்தனர்.
21-Dec-2024