உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோரைக்குட்டம் செல்லும் புதிய ரோட்டின் பக்கவாட்டில் அரிப்பு

கோரைக்குட்டம் செல்லும் புதிய ரோட்டின் பக்கவாட்டில் அரிப்பு

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம் ஊராட்சியில் ஓராண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட புதிய தார் ரோட்டின் பக்கவாட்டில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.சேதுக்கரை செல்லும் ரோட்டருகே உள்ள விலக்கில் இருந்து2 கி.மீ.,ல் உள்ள கோரைக்குட்டம் கிராமத்திற்கு செல்லக்கூடிய ரோட்டின் இரு புறங்களிலும் மண்ணரிப்பு ஏற்பட்டு புதிய ரோடு சேதமடையும் அபாய நிலை நீடிக்கிறது. கோரைக்குட்டம் கிராம மக்கள் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த கோரைக்குட்டம் ரோட்டில் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தனர். தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக புதிய தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. கடலும் ஆறும் சங்கமிக்கக் கூடிய தரவைப் பகுதி செல்லும் வழியில் சிற்றோடை செல்கிறது. இதன் அருகே நான்கடி உயரத்திற்கு மணல் சூழ்ந்த பகுதியில் தார் ரோடு செல்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் பக்கவாட்டு பகுதி முழுவதும் மண்ணரிப்பு ஏற்பட்டு புதிய ரோடு சேதமடைந்துள்ளது. எனவே திருப்புல்லாணி யூனியன் நிர்வாகம் பக்கவாட்டில் கிராவல் மண் அடித்து ரோட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் அரசின் நிதி வீணடிக்கப்படும் அபாயம் உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ