உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணி அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் கண்காட்சி 

திருப்புல்லாணி அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் கண்காட்சி 

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி சுரேஷ் அழகன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் வரைந்த ஓவியக்கண்காட்சி நடந்தது.தலைமையாசிரியர் மகேந்திரன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியை பிரேமா வரவேற்றார். விருந்தினராக பங்கேற்ற திருப்புல்லாணி அரசுப்பள்ளி முன்னாள் மாணவரும் பழநிவலசை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரான முருகன் இப்பள்ளியில் பயின்றது குறித்து தனது நினைவுகளை பகிர்ந்தார். பட்டதாரி ஆசிரியர் ராஜகுரு நன்றி கூறினார்.ஆசிரியர்கள் தனலட்சுமி, ஜீவா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ள ஓவிய ஆசிரியர் அன்பழகன் தனது மாணவர்களின் ஓவியங்களை கண்காட்சியாக அமைத்திருந்தார். இதில் இடம் பெற்ற வேலு நாச்சியார், மகாத்மா காந்தி, இயற்கை காட்சிகள், மது ஒழிப்பு, சரஸ்வதி, நடன மங்கை ஓவியங்கள் அனைவரையும் கவர்ந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை