கூடுதல் கட்டணம் வசூல் பார்க்கிங்கில் அடாவடி
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கிங்கில் வெளிமாநில பக்தர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான கார் பார்க்கிங் அக்னி தீர்த்த கடற்கரை சாலை அருகில் உள்ளது. இங்கு நிறுத்தும் வாகனத்திற்கு ரூ. 20 கட்டணம் வசூலிக்கின்றனர். அங்குள்ள சில ஊழியர்கள் வெளிமாநில வாகனங்களுக்கு ரசீது கொடுக்காமல் அடாவடியாக ரூ.50 கட்டணம் வசூலிக்கின்றனர். விவரம் அறிந்த பக்தர்கள் கேட்டால் மிரட்டியுள்ளனர். இவ்வாறு கேரள பக்தரிடம் ரூ.50 கட்டணம் வசூலித்து திருப்பி கேட்ட போது கோயில் ஊழியர் தர மறுத்து மிரட்டிய வீடியோ பரவி வருகிறது. இதையடுத்து விசாரணை நடந்து வருகிறது.