உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்

கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கண் தானம் பற்றி விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் ஊர்வலம் நடந்தது. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த 40வது தேசிய கண்தானம் விழிப்புணர்வு வார விழாவில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கண்தான விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம் மற்றும் மருத்துவக்கல்லுாரி மாணவர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை துவக்கி வைத்தார். புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று வழிவிடு முருகன் கோயில் வழியில் வந்து மீண்டும் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை ஊர்வலம் வந்தடைந்தது. கண்தானம் விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தொண்டு நிறுவனங்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர் என 7 பேருக்கு கேடயங்களும் மற்றும் 10 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி னார். மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் அமுதாராணி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க தலைமை கண் மருத்துவர் சுபசங்கரி, நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ் குமார், துணை நிலைய மருத்துவ அலுவலர்கள் சிவக்குமார், கண்ணகி, அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கி மேலாளர் சரவணன், மருத்துவ கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை