தீயில் விழுந்த விவசாயி பலி
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் களிமண்குண்டு பகுதியை சேர்ந்தவர் நல்லமுத்து 67. விவசாயியான இவர் தனது தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டினார். பின்னர் அங்கு கிடந்த தென்னை, பனை ஓலைகளை சேகரித்து தோப்பின் ஒரு மூலையில்குவித்து தீவைத்தார்.அப்போது அதிகமாக ஏற்பட்ட கரும்புகையால் நல்லமுத்து மயக்கமடைந்து தீக்குள் விழுந்து கருகினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் இறந்தார். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.