மேலும் செய்திகள்
களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி ஜரூர்
09-Oct-2024
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கனமழை
11-Oct-2024
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் விதைப்பு செய்திருந்த நெற்பயிர்கள் முளைத்துஉள்ளன. இந்நிலையில் கற்காத்தகுடி, கூடலுார், நத்தக்கோட்டை, வடக்கலுார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் நெல் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான வயில்களில் நெற்பயிர்கள் சிறிதாக வளர்ந்துஉள்ள நிலையில் மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. இதனால் வயல்களில் உள்ள மழை நீரை விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனர். கற்காத்தகுடி உள்ளிட்ட சில பகுதிகளில் சில வயல்களில் மழை நீர் வெளியேற வழி இல்லாததால் மோட்டார் இன்ஜின் மூலம் வயல்களில் உள்ள மழை நீரை வெளியேற்றும்பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
09-Oct-2024
11-Oct-2024