மேலும் செய்திகள்
50 சதவீத மானியத்தில் நெல் விதை விற்பனை
01-Sep-2025
திருப்புல்லாணி; திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் உத்தரகோசமங்கை விரிவாக்க வேளாண்மை மையத்தில் விதை நெல் வழங்கும் பணி நடந்து வருகிறது. பி.என்.ஆர்., என்.எல்.ஆர்., கோ- 55, பி.பி.டி., ரக விதை நெல் மற்றும் பாரம்பரிய நெல் ரகமான துாயமல்லி, சீரக சம்பா உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் விதை நெல் மூடைகள் விற்பனை செய்யப்படுகிறது. மின்னணு பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் கார்டுகள் மூலமாகவும் விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் கார்டு, சிட்டா அடங்கல் உள்ளிட்டவைகளை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் தெரிவித்தார்.
01-Sep-2025