உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வி.ஏ.ஓ., வருகைக்காக காத்திருக்கும் விவசாயிகள் நவ.15 காப்பீடு பதிவிற்கு கடைசி நாள்

வி.ஏ.ஓ., வருகைக்காக காத்திருக்கும் விவசாயிகள் நவ.15 காப்பீடு பதிவிற்கு கடைசி நாள்

கடலாடி: பயிர் காப்பீடு செய்வதற்கு நவ.15 கடைசி நாளாக அரசு அறிவித்துள்ளதால் பதிவு செய்வதற்காக விவசாயிகள் வி.ஏ.ஓ., அலுவலகத்தில்காத்திருந்து அவதிப்படுகின்றனர். கடலாடி அருகே ஆப்பனுார் வி.ஏ.ஓ., கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தொடர் அலைக்கழிப்பு செய்து வருவதால் விவசாயிகள் காலை முதல் மாலை வரை வி.ஏ.ஓ., அலுவலக வாசலில் தொடர்ந்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆப்பனுார் விவசாயி சண்முகநாதன் கூறியதாவது: தற்போது விவசாயிகள் அந்தந்த வி.ஏ.ஓ.,விடம் சென்று பயிர் காப்பீடு செய்வதற்கான தங்களுடைய சர்வே நம்பரில் பட்டா, சிட்டா, அடங்கல்உள்ளிட்ட மூவிதழ் சான்றிதழ் பெறுவதற்காக வருகின்றனர். ஆப்பனுார் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட விவசாயிகள் மூவிதழ் சான்று பெறுவதற்காக வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.இதுகுறித்து அலைபேசியில் விவசாயிகள் கேட்டதற்கு நீங்கள் முதுகுளத்துார் வாருங்கள். நான் கோர்ட் வேலையாக உள்ளேன் என தொடர்ந்து அலைக்கழிப்பு செய்கிறார். நவ.15 பயிர் காப்பீட்டிற்கு கடைசி நாளாக உள்ளதால் சம்பந்தப்பட்ட முதியவர்கள், பெண்கள், விவசாயிகள் தொடர் அலைக்கழிப்பை சந்திக்கின்றனர். எனவே கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !