உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கரி உற்பத்திக்காக கருவேல மரம் விறகு வெட்டும் விவசாயிகள்

கரி உற்பத்திக்காக கருவேல மரம் விறகு வெட்டும் விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம், சுற்றுப்புற பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின் விவசாயிகள் கோடை சாகுபடியில் ஆர்வம் இன்றி கரி உற்பத்திக்காக சீமைக்கருவேல மரம் விறகுகள் வெட்டும் தொழிலில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தங்களது பட்டா இடங்களில் உள்ள கருவேல மரம் விறகுகளை வெட்டி பெரிய வகை விறகுகளை எடையிட்டு நேரடியாக விறகுகளாகவும், சிறிய வகை விறகுகளை கரிமூட்டம் மூலம் கரிகளாக்கியும் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இத்தொழிலுக்கு ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கூலி தொழிலாளர்கள் அதிகளவில் தேவைப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் சீமைக்கருவேல மரம் விறகு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !