மேலும் செய்திகள்
கால்நடை வளர்ப்போர் பாதிப்பு
23-Oct-2025
கடலாடி: கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். குறிப்பாக தங்களது வாழ்வாதாரத்திற்கு வருமானம் ஈட்டும் தொழிலாக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்க்கின்றனர். வெறிநாய்களால் பலியாகும் கால்நடைகளால் மிகுந்த பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆட்டுக்கிடைகள் உள்ளிட்டவற்றில் கூட்டமாக புகுந்து கடித்து உயிர் பலி ஏற்படுத்தும் வெறிநாய்கள் மூலமாக தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தங்குடி விவசாயி பொன்னுப்பாண்டி கூறியதாவது: செப்., 1ல் ஆட்டுக்கிடையில் 10 செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியதில் அவை பலியாகின. வருவாய்த்துறையில் நிவாரணம் வேண்டி மனு அளித்தோம். வருவாய்த்துறையினர் கூறுகையில், இயற்கை பேரிடர் காலங்களில் சேதம் மற்றும் கால்நடைகள் பலியாகும் போது நிவாரணங்கள் கிடைக்கும். வெறி நாய்கள் கடிக்கும் போது அதற்கான நிவாரணங்கள் இல்லை என கூறுகின்றனர். எனவே வெறி நாய்களால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு, பேரிடர் காலங்களில் வழங்கப்படும், இழப்பீட்டுத் தொகையை போல வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
23-Oct-2025