நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்வருவாய் கோட்ட அளவில் நாளை (ஆக.,19) செவ்வாய் அன்று மாலை 4:00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும். விவசாயிகளும், விவசாய சங்கப்பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம், என ஆர்.டி.ஓ., ராஜமனோ கரன் தெரிவித்துள்ளார்.