உப்பூரில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான உப்பூர், நாகனேந்தல், கடலுார், சித்துார் வாடி, காவனுார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் செப்., மாதம் விவசாயிகள் நெல் விதைப்பு செய்தனர். அதன் பின் நெல் விதை முளைப்புக்கு ஏற்ற மழை இல்லாததால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையால் வயல்களில் ஈரப்பதம் நிலவுகிறது. நெல் முளைப்புக்கு ஏற்ற ஈரப்பதம் நிலவுவதால் நெற்பயிர்கள் விரைவில் முளைத்து விடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை இன்றி விதைப்பு செய்த நெல் வயல்களில் மீண்டும் நெல் விதைப்பு செய்யும் நிலையில் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளளர்.