உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு நிர்ணயித்த உரவிலை விவசாயிகள் வலியுறுத்தல்

அரசு நிர்ணயித்த உரவிலை விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாடானை : உரங்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். திருவாடானை தாலுகாவில் பருவ மழை துவங்கியுள்ளதால் விதைப்பு பணிகள் முடிவுற்று களை எடுத்தல் மற்றும் மேலுரம் இடும் பணிகள் நடக்கிறது. நடப்பு சம்பா பருவ சாகுபடியில் விவசாயிகள் அடியுரமாகவும், மேலுரமாகவும் தக்க நேரத்தில் உரங்களை இட வேண்டும்.பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் உர உரிமம் பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அரசு நிர்ணயம் செய்த விலை தெரியாமல் விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.இது குறித்து செங்கமடை விவசாயிகள் கூறியதாவது: ஆண்டு தோறும் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட உர விலை பட்டியல் வேளாண் அலுவலர்களால் அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு விவசாயப் பணிகள் துவங்கி இரு மாதங்களாகியும் உரவிலையை அறிவிக்கவில்லை என்றனர். ராமநாதபுரம் வேளாண் அலுவலர் நாகராஜ் கூறுகையில், உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி உர விலைப் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ