உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோடை உழவில் உளுந்து, பயறு விதைக்க விவசாயிகள் ஆர்வம்

கோடை உழவில் உளுந்து, பயறு விதைக்க விவசாயிகள் ஆர்வம்

கடலாடி: கடலாடி அருகே கடுகுசந்தை, மலட்டாறு, எஸ்.தரைக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை உழவு செய்து உளுந்து உள்ளிட்ட பயறு வகைகள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். நெல் சாகுபடி செய்த பின் சமீபத்தில் பெய்த கோடை மழையால் விளை நிலங்களில் ஈரப்பதம் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் டிராக்டரில் கோடை உழவில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் கூறியதாவது: பொதுவாக நெல் மற்றும் சிறு குறு தானியங்கள் அறுவடைக்கு பின்னர் கோடையில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய உளுந்து, பயிறு வகைகளை விதைக்க உள்ளோம். இதற்காக டிராக்டரில் நிலத்தை நன்கு கிளறி உழவு செய்த பின் கோடை கால சாகுபடி மேற்கொள்ள உள்ளோம். பெரும்பாலும் கண்மாய் பாசனம் உள்ள பகுதிகளில் விவசாயிகள் இரண்டாம் போக சாகுபடி செய்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ