கோடை நெல் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாயிகள்கோடை நெல் சாகுபடியை தீவிரப்படுத்தி உள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தி பெரிய கண்மாய் பாசன பகுதிகளான இருதயபுரம், பெரியார் நகர், நெடும்புலி கோட்டை, ரெகுநாத மடை, பொன்னால கோட்டை, பொட்டகோட்டை, நோக்கன் கோட்டை, பிச்சனார் கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு பின் நிலவிய ஈரப்பதத்தை பயன்படுத்தி விவசாயிகள் நெல் விதைப்பு செய்தனர். தற்போது நெற்பயிர்களின் வளர்ச்சி நிலையை ஊக்குவிப்பதற்காக புதிய தன்மையில் உள்ள நீரை பாய்ச்சி தற்போது உரமிடும் பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.